உள்ளூர் செய்திகள்
பள்ளத்தில் சிக்கிய லாரி.

பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-04-16 05:53 GMT
பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆலாம்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக இருந்தது. இந்த நிலையில் திருச்செங்கோட்டில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மாற்றுப்பாதையில் செல்லாமல் ஆலாம்பாளையம் வழியாக வந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மரை ஒட்டியுள்ள சேறும், சகதியுமான பள்ளத்தில் சிக்கியது.

 பல நேரம் போராட்டத்துக்கு பின்னர் லாரி எந்திரம் மூலம் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டது. லாரி பள்ளத்தில் சிக்கியதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அந்த லாரி டிரான்ஸ்பார்மரில் கவிழ்ந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
Tags:    

Similar News