search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளத்தில்"

    • சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார்.
    • ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

    ஏற்காடு:

    சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.

    ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை, நடைபயிற்சிக்கு வந்த சிலர், ரமேஷை பார்த்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரமேஷை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    பரமத்திவேலூர்:

    வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.

    ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    • ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

    சென்னிமலை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). கட்டிட தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று காலையில் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காங்கேயம் ரோட்டில் அத்திக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×