மார்த்தாண்டம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.
மார்த்தாண்டம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com