search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caused"

    போடி அருகே கழிவு நீருடன் கண்மாய் நீர் வயல்களுக்குள் புகுந்ததால் சோள கதிர்கள் சேதம் அடைந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள திருமலாபுரத்தில் சங்கரப்பன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தூர்வாரப்படவே இல்லை. கடந்த 10 நாட்களுக்கு மேலாக போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால் கண்மாய் நிரம்பியது.

    அப்போதே தண்ணீரை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது கண்மாய் உடைந்து அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதனால் சோளகதிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், போடி பகுதியில் நெல், சோளம், கரும்பு ஆகியவை பயிரிட்டு வருகிறோம். சங்கரப்பன் கண்மாய் தூர்வாரச்சொல்லி மனு அளித்து நடவடிக்கை எடுக்க வில்லை.

    தற்போது கண்மாய் நீரில் சாக்கடை நீரும் கலந்து வயல்களுக்குள் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அருகில் உள்ள மதிமுகம் கண்மாயிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆனால் அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த கண்மாய் நீரை நம்பி 800 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    மீன் பிடி குத்தகை உரிமம் எடுத்தவர்கள் கண்மாய் நீரை திறக்க விடாமல் செய்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

    ×