உள்ளூர் செய்திகள்
கைது

நாகர்கோவில் பேஸ்புக்கில் அவதூறு கருத்தை பதிவிட்ட வாலிபர் கைது - சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Published On 2022-04-03 06:56 GMT   |   Update On 2022-04-03 06:56 GMT
நாகர்கோவில் அருகே பேஸ்புக்கில் அவதூறு கருத்தை பதிவிட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

‘கன்னியாகுமரி நாகர்கோவில்’ என்ற பெயரில் உள்ள பேஸ்புக்கில் மதக்கலவரத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுத்தும் வண்ணம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டது பறக்கை புல்லுவிளையைச் சேர்ந்த கண்ணன் (வயது 36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் கண்ணனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் வேறு ஒரு பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது தெரிய வந்தது. போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் பேஸ்புக்கில் இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் நீக்கினார்கள். கைது செய்யப்பட்ட கண்ணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
Tags:    

Similar News