உள்ளூர் செய்திகள்
கைது

கிண்டியில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியவர் கைது

Published On 2022-03-17 10:18 GMT   |   Update On 2022-03-17 10:18 GMT
கிண்டி ரெயில் நிலையம் அருகில் 500 ரூபாய்க்கு சில்லரை மாற்றியதாக அஜாஸ் தெரிவித்தார். அவர் யாரிடம் சில்லரை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

சென்னை கிண்டி மடுவங்கரை சக்கரபாணி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் சரவணன் என்பவர் நேற்று பணியில் இருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கினார். அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனையாளர் சரவணன், இது பற்றி கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவரது பெயர் அஜாஸ் என்பதும், திருவல்லிக்கேணி அக்பர் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வீட்டு புரோக்கரான இவருக்கு கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிண்டி ரெயில் நிலையம் அருகில் 500 ரூபாய்க்கு சில்லரை மாற்றியதாக அஜாஸ் தெரிவித்தார். அவர் யாரிடம் சில்லரை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News