உள்ளூர் செய்திகள்
திருப்புறம்பயம் சாட்சிநாதர் சுவாமி கோவிலில் மதுரை ஆதீனம் தரிசனம்

வெளிநாட்டு கல்வி தேவையற்றது - மதுரை ஆதீனம்

Published On 2022-03-08 08:25 GMT   |   Update On 2022-03-08 08:25 GMT
வெளிநாட்டு கல்வி தேவையற்றது என மதுரை ஆதீனம் பேட்டியளித்தார்.
சுவாமிமலை:

சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பயம் சாட்சிநாதர் சுவாமி கோவிலுக்கு முதல்முறையாக மதுரை 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்ற வருகை தந்தார். 

அவரை கோவில் டிரஸ்டி கோவிந்தராஜ் மற்றும் பணியாளர்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி முறையான வரவேற்பு வழங்கினர். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில், திருப்புறம்பியம் சாட்சிநாதர் சுவாமி கோவிலில் உள்ள திருத்தேர் சரிசெய்யப்பட்டு மாசிமக தேரோட்டம் நடத்தப்படும். 

தற்போது உள்ள சூழ்நிலையில் வெளிநாட்டுக் கல்வி என்பது தேவையற்றது. இந்த வெளிநாட்டு கல்வியை நாம் போய் கற்பதால் தான் உக்கிரன் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டத்தால், போரினால், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதையும், தமிழில் அர்ச்சனை செய்வதையும், நான் மனமார வரவேற்கிறேன். நாடு முழுவதும் கோவில் சொத்துக்களை வைத்துக்கொண்டு கோவிலுக்கு குத்தகை தராதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால் ஆகத்தான் பிறப்பார்கள். 

திருப்புறம்பியம் சாட்சிநாதர் சாமிகோவில் புரனமைக்கப்பட்டு, இந்த கோவிலுள்ள திருத்தேர் சீர்செய்யப்பட்டு வருகின்ற மாசி மாதம் தேரோட்டம் நடத்தப்படும் என்றார்.
Tags:    

Similar News