உள்ளூர் செய்திகள்
வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டபோது எடுத்தப்படம்

வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் - நீலகிரி மாணவி முதலிடம்

Published On 2022-01-28 12:31 GMT   |   Update On 2022-01-28 12:31 GMT
அரசு பள்ளியில் படித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா 193.33 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
கோவை:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளம் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான தர வரிசைப்ப்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி இன்று வெளியிட்டார்.

இந்த தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வாஸ்ரீ 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்கலா 199 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாஜின் 198.75 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளியில் படித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா 193.33 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 200-க்கு 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெரால்ட் எடிசன் 189.68 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் 189.50 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுபா 200-க்கு 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 190.03 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கைலாஷ் சங்கர் 189.99 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி 11-ந் தேதி கலந்தாய்வு தொடங்கி நடக்கிறது. 
Tags:    

Similar News