உள்ளூர் செய்திகள்
மதுபானம் விற்ற 67 பேர் கைது

குடியரசு தின விழா நாளில் மதுபானம் விற்ற 67 பேர் கைது

Published On 2022-01-27 10:20 GMT   |   Update On 2022-01-27 10:20 GMT
தடையை மீறி மதுபானம் பதுக்கி விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

குடியரசு தின விழாவை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத் தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவை மாநகரில் போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு, போத்தனூர், ஆவாரம் பாளையம், சங்கனூர்,  தொட்டிப்பாளையம், கோல்டு வின்ஸ், விளாங் குறிச்சி ரோடு, தடாகம் ரோடு, காந்தி பார்க், சித்தாபுதூர், கோவில் மேடு, வெங்கிட்டாபுரம், ரத்தினபுரி, காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லுர், உப்பிலிபாளையம், சவுரிபாளையம், சித்ரா உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 506 மது பாட்டிகளை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து விற்ற 31 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 1,600 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 

இதேபோல கோவை புறநகரில் பெரியநாயக் கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள் ளாச்சி, வால்பாறை, மேட்டுப் பாளையம் உள்ளிட்ட சப்&டிவிசனுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 359 மது பாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News