உள்ளூர் செய்திகள்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு காலணி மாலை அணிந்து மனு அளிக்க வந்தவர்.

கலெக்டர் அலுவலகத்திற்கு காலணி மலை அணிந்து மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு

Published On 2022-01-25 08:13 GMT   |   Update On 2022-01-25 08:13 GMT
கலெக்டர் அலுவலகத்திற்கு காலணி மலை அணிந்து மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
கரூர்:
கொரோனா பரவல் கார ணமாக திங்கட்கிழமைகளில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட் டுள்ளது. இருப்பினும் இது குறித்து அறியாமல் மாவட்ட மனு அளிக்க வரும் பொது மக்கள் மனுக்களை செலுத்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் யாரும் அனு மதிக்கப்படாததால் நுழைவு வாயில் பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் பெட்டி நேற்று   வைக்கப்பட்டது. சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் யார், எதற்காக வந்துள்ளனர் என விசாரித்து மனு அளிக்க வந்தவர்களை அங்குள்ள பெட்டியில் மனுக்களை செலுத்த  அறிவுறுத்தினர்.

அப்போது கழுத்தில் செருப்பு மாலை  அணிந்தவாறு ஒருவர் மனு அளிக்கவந்தார். அதனை கண்ட போலீசார் அவரது கழுத்திலிருந்த செருப்பு மாலைகளை உடனடியாக அகற்றக் கூறினர்.  இதையடுத்து செருப்பு மாலையை அவர் அகற்றிய பின் அங்கிருந்த பெட்டியில் மனுவை செலுத்தினார். அவர் ஆண்டாங்கோவில் புதூரை  சேர்ந்த  ரகுநாதன் என்பது தெரிய வந்தது. அதில் அவர் கூறியிருப்பது, தண்ணீரில் இயங்கும் வெல்டிங்  எந்திரம் கண்டுபிடித்த சாதனையாளர்,    அவரது மகன் நிலநடுக்க கருவி கண்டு பிடித்ததாகவும், முன்னாள் ஆட்சியர் இதனை பாராட்டி உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு போய்விடுவார் என பாராட்டினார்.
 
3  மகன்கள்  உள்ளனர். யாருக்கும் வேலை இல்லை. 1 மகன் கடன் வாங்கி ஏசி மெக்கானிக் கடை வைத்துள்ளார். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். எனவே கலெக்டர் தங்களுக்கு உதவிடுமாறு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News