உள்ளூர் செய்திகள்
கலந்தாய்வு

கோவையில் பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு

Published On 2022-01-24 09:22 GMT   |   Update On 2022-01-24 09:22 GMT
கோவையில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வில் 22 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கோவை:

பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள் நடைபெறு கிறது. இதையடுத்து அவர்களுக்கு ஜனவரி 25-ந்தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் ஜனவரி 28-ந்தேதி  பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 22 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News