உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவை ஆஸ்பத்திரிகளில் 13 சதவீத படுக்கைகள் நிரம்பின

Published On 2022-01-23 06:40 GMT   |   Update On 2022-01-23 06:40 GMT
கோவையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் முதலில் 100, 100-க்கும் குறைவாகவே தொற்று பாதிப்பு பதிவாகி வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1000, 2000, 3000 என உயர்ந்து நாளுக்கு நாள் தொற்று பரவல் மின்னல் வேகத்தில் செல்கிறது. 
 
இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்திலேயே உள்ளனர். தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரும் முககவசம் அணிய வலியுறுத்துவதுடன், அணியாதவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்.

இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் எண்ணிக்கையும்உயர்த்தப்பட்டு வருகிறது.மேலும் கொரோனா சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப் படுவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கும் பணியும் நடக்கிறது.

தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 3,886 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 219 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 59 ஆயிரத்து 975 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்படுவர்களில் 50 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் சதவீதம் 22 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பரவல் சதவீதம் 25 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே நோய் தொற்றை கட்டுப்படுத்த தினந்தோறும் சுமார் 4000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் 800-க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பரவல் சதவீதம் அதிகரித்ததை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் 6 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

கோவை கலெக்டர் சமீரன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில்    16    ஆயிரத்து 528 படுக்கைகள் தயார் நிலை யில் உள்ளன. இதுவரை 13 சதவீதம் படுக்கைகள் நிரம்பி உள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற் படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தனிமைப்படுத் தப்பட்டவர்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 166 சிறிய அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News