உள்ளூர் செய்திகள்
உயர்நீதிமன்றம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Published On 2022-01-19 05:56 GMT   |   Update On 2022-01-19 07:43 GMT
இந்த கோரிக்கையை நாளை மறுதினம் பரிசீலிப்பதாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பதில் அளித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருப்பதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை நாளை மறுதினம் பரிசீலிப்பதாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பதில் அளித்துள்ளது.
Tags:    

Similar News