உள்ளூர் செய்திகள்
உப்பளம்

மரக்காணம் பகுதியில் பலத்த மழை- 3,500 ஏக்கர் உப்பளம் நீரில் மூழ்கியது

Update: 2022-01-18 03:51 GMT
மழை காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள சுமார் 3,500 ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம்:

மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. அதிகாலை நேரத்தில் கடுமையான குளிர் நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலப்பாக்கம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள சுமார் 3,500 ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News