search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பளம்"

    • தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் ஏராளமான உப்பளங்கள் உள்ளது. இதில் ஹட்லிமச்சாடு என்பவருக்கு சொந்தமான உப்பளத்தில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை ஓலைக் கூரை செட் (குடோன்) அமைத்து அதில் அம்பாரமாக தேக்கி வைத்திருந்தனர்.

    ஹட்லி மச்சாடு வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவரது உப்பளத்தில் இருந்த ஓலை கூரை திடீரென குடோன் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து காவலாளியான போல்டன்புரத்தை சேர்ந்த பாலு மற்றும் கண்காணிப்பாளரான சத்யாநகரை சேர்ந்த அந்தோணி ஆகியோர் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பல லட்சம் மதிப்பிலான உப்புகளும், அதனை வைத்திருந்த கூரை செட்டும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மனின் முகத்தில் வெயில் அடிக்கும்போது தான் பூஜைகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
    • கோவிலை பராமரிக்கவும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி, ஆக.9-

    சாமித்தோப்பு உப்ப ளத்தின் நடுவே பாண்டிய மன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெயில் காத்த அம்மன் கோவில் உள்ளது. பகல் 12 மணிக்கு இந்த கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனின் முகத்தில் வெயில் அடிக்கும்போது தான் பூஜைகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் நீண்ட காலமாக மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று வடக்கு தாமரைகுளம் பகுதி மக்கள், தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக இந்த கோவிலை பராமரிக்கவும் மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி நேரில் சென்று பார்வையிட்டதோடு பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அவருடன் ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசம்பத், வடக்கு தாமரைகுளம் கிளை செயலாளர் மணி உள்பட பலர் சென்றனர்.

    • தீயணைக்கும் படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
    • அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    கன்னியாகுமரி, மே.30-

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆண்டிவிளையில் உப்பளம் உள்ளது.

    இந்த உப்பளத்தில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மளமள எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி பென்னட் தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவ விடாமல் அணைத்த னர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

    ×