search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நள்ளிரவில் உப்பளத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    X

    தீ விபத்தில் எரிந்து கிடக்கும் கூரை செட் மற்றும் பொருட்கள்.

    நள்ளிரவில் உப்பளத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

    • தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் ஏராளமான உப்பளங்கள் உள்ளது. இதில் ஹட்லிமச்சாடு என்பவருக்கு சொந்தமான உப்பளத்தில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை ஓலைக் கூரை செட் (குடோன்) அமைத்து அதில் அம்பாரமாக தேக்கி வைத்திருந்தனர்.

    ஹட்லி மச்சாடு வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவரது உப்பளத்தில் இருந்த ஓலை கூரை திடீரென குடோன் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து காவலாளியான போல்டன்புரத்தை சேர்ந்த பாலு மற்றும் கண்காணிப்பாளரான சத்யாநகரை சேர்ந்த அந்தோணி ஆகியோர் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பல லட்சம் மதிப்பிலான உப்புகளும், அதனை வைத்திருந்த கூரை செட்டும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×