என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே உப்பளத்தில் பயங்கர தீ விபத்து
- தீயணைக்கும் படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
- அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
கன்னியாகுமரி, மே.30-
கன்னியாகுமரி அருகே உள்ள ஆண்டிவிளையில் உப்பளம் உள்ளது.
இந்த உப்பளத்தில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மளமள எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி பென்னட் தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவ விடாமல் அணைத்த னர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.
Next Story






