உள்ளூர் செய்திகள்
மாட்டு பொங்கலை முன்னிட்டு குதிரை, காளை, பசுக்களுக்கு சிறப்பு பூஜை

உலக அமைதிக்காக குதிரை, காளை, பசுக்களுக்கு சிறப்பு பூஜை

Published On 2022-01-16 07:06 GMT   |   Update On 2022-01-16 07:06 GMT
பட்டுக்கோட்டையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு உலக அமைதிக்காக குதிரை, காளை, பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகில் உள்ள நல்வழிகொல்லை அன்பாலயத்தில் 
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு குதிரைகள், காளைகள் மற்றும் 
பசுக்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஆலடிக்குமுளை ஊராட்சி மன்ற தலைவர் 
தொடங்கி வைத்தார்.

இதில் காளைகள், குதிரைகள், பசுக்கள் ஆகியவற்றை கட்டிவைத்து 
மாலை அணிவித்து, பொட்டு வைத்தனர். பின்னர் பொங்கலிட்டு 
நல்வழி கொல்லை சித்தர் மந்திரங்களை ஓத சிறப்பு பூஜைகள், 
தீபாராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் அனைவரும் 
ஓரிடத்தில் அமர்ந்து பொங்கல் உண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் 
ஊராட்சி மன்ற துணை தலைவர் இளங்கோ, அரசு வழக்கறிஞர் சுப்பு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், வழக்கறிஞர் 
மாஸ்கோ, பட்டுக்கோட்டை கரிக்காடு திமுக நிர்வாகி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News