உள்ளூர் செய்திகள்
ரூ.20 லட்சம் அபேஸ் தனிப்படை தீவிரம்

கோவையில் கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் அபேஸ்- 5 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

Published On 2022-01-16 06:42 GMT   |   Update On 2022-01-16 06:42 GMT
வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணத்தை எடுத்து சென்ற மர்மநபர்கள்
கிணத்துக்கடவு:
 
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். கல்குவாரி உரிமையாளர். இவரது வீட்டிற்கு 5 மர்மநபர்கள் டிப்&டாப் உடையுடன் காரில் வந்து இறங்கினர்.

வீட்டிற்கு சென்ற அவர்கள் தாங்கள் வருமானவரித் துறையில் இருந்து வருவதாக கூறி ஒரு அட்டையை காண்பித்தனர். மேலும் அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டர். 

பின்னர் அறையில் இருந்து ரூ.20 லட்சம் மற்றும், அவரது ஜி.எஸ்.டி. ஆவணங்கள், 5 காசோலைகள், செல்போன், சி.சி.டி.வி காமிரா, ஹார்டு டிக்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர். மேலும் பஞ்சலிங்கத்திடம் காலை அலுவலகத்துக்கு விசார ணைக்கு வர வேண்டும் என கூறிவிட்டு புறப்பட்டனர்.

இருப்பினும் வந்தவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பஞ்சலிங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,  கடந்த 10 நாட்களுக்கு      முன்பு பஞ்சலிங்கம் கல்குவாரியில் இருந்தபோது காரில் 4 பேர் வந்தனர். 

அவர்கள் தாங்கள் ஊட்டி யில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு உங்களிடம் இருந்து கல் உள்ளிட்ட பொருட்கள் தேவை என கூறியதும், சில நாட்கள் கழித்து வந்து வாங்கி கொள்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதன்பின்னர் வரவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் அந்த நபர்கள் தான் வருமானவரித்துறை அதிகாரிகளாக நடித்து பணத்தை அபேஸ் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் ஊட்டிக்கும், மற்றொரு குழுவினர் திருச்சிக்கும் சென்றுள் ளனர். அங்கு பல இடங்களில் மர்மநபர்கள் குறித்து விசாரித்து தேடி வருகிறார்கள்.

3-வது குழுவினர் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகள் உள்ளிட்டவைற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்
Tags:    

Similar News