உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தென்காசி மாவட்டத்தில் 9,500 ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் கிட் விற்பனை செய்ய இலக்கு-தோட்டக்கலை துணை இயக்குநர் தகவல்

Published On 2022-01-10 09:47 GMT   |   Update On 2022-01-10 09:47 GMT
தென்காசி மாவட்டத்தில் 9,500 ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் கிட் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி தெரிவித்துள்ளார்.
தென்காசி:-

தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
தோட்டக்கலை துறை மூலம் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தொகுப்புகள் ‘கிட்’ வழங்கப்படுகிறது.

மாடித் தோட்டத் தொகுப்பு காய்கறி விதைகள், வீட்டு காய்கறி தோட்ட தொகுப்புகள் மற்றும் ஊட்டச்சத்து காய்கறி தோட்ட தொகுப்புகள் வாங்கி பயன்பெற விரும்புவோர் தோட்டக்கலைத் துறையின் இணையதளமான www.tnhorticulture.tn.gov.in.kit அல்லது உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பின்னர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரால் விண்ணப்பம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். 

பின்னர் விண்ணப்பித்தவருக்கு விண்ணப்பம் பரிசீலித்த விவரம், பதிவு எண் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரின் அலைபேசி எண் பரிசீலனை ஆகியவை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

 விண்ணப்பதாரர்கள் உடனடியாக அணுகி ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து மாடித்தோட்ட தொகுப்பை ரூ.225 விலையிலும், வீட்டுகாய்கறி தோட்ட தென்காசி தொகுப்புகள் 500 எண்களும் தொகுப்பை ரூ.15 விலையிலும், ஊட்டசத்து காய்கறி தோட்ட தொகுப்பை நாற்றுகளாக ரூ.25 விலையிலும் பெற்றுக் கொள்ளலாம். 

மாவட்டத்திற்கு மாடித்தோட்ட வீட்டு காய்கறி தோட்டதொகுப்புகள் 4000 எண்களும் மற்றும் ஊட்டசத்து காய்கறி தோட்ட தொகுப்புகள் 5000 எண்களும் மொத்தம் 9500 தொகுப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 9500 தொகுப்புகளில் 2163 தொகுப்புகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News