உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மழை பாதிப்பு நிவாரண அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Published On 2022-01-08 09:55 GMT   |   Update On 2022-01-08 09:55 GMT
தமிழக அரசு மழை பாதிப்பு நிவாரண அறிவிப்பு அரசாரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தினர்.
திருவாரூர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறையின் சார்பில் 4.1.2022-ல் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 9 மற்றும் 10-ன் படி, கடந்த மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட வேளாண்மைக்கான இழப்பீடு வழங்கிடும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிதி உதவியும், மனித உயிரிழப்பு, கால்நடைகள் இறப்புக்குரிய உரிய நிவாரண அறிவிப்பும் இல்லை.

ஏற்கனவே தமிழக முதல்வர் வேளாண் துறையிடம் பெற்று வெளியிட்ட நிவாரண அறிவிப்பையே தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 2415 ரூபாய் மதிப்பில் இடுபொருட்களாக வழங்கிட அறிவிக்கப்பட்டதை மாற்றி இந்தத் தொகையை பணமாக வழங்கிட 
திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வேறு எந்த புதிய அறிவிப்பும் இல்லை. தமிழக முதல்வர் கூறிய நிவாரண அறிவிப்புக்குப் பிறகு பெரு மழை பொழிந்து அறுவடை நிலையிலிருந்த 
சம்பா பயிர்கள் சில இடங்களில் சாய்ந்து அழிந்தும், விளைச்சல் 
பல இடங்களில் பாதிக்கப்பட்டும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் முந்தைய அறிவிப்பையே நடைமுறைப்படுத்துவது என்பது எந்த வகையிலும் நியாயமானது இல்லை. இந்நிலையில் ஒரு ஏக்கருக்கு ரூ.2415 நிவாரணத் தொகையாக கொடுப்பது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல. 

ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை சாகுபடி செலவாகியுள்ளது. எனவேதான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. 

எனவே தமிழக முதல்வர் இந்த அரசாணை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து வழங்கப்படவுள்ள நிவாரணத் தொகையை மழைபாதிப்பு இழப்பின் அளவிற்கேற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும்.

கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் இந்தியாவி லேயே அதிக மழையினால் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். எனவே மத்திய அரசு தமிழ்நாடு அரசு கோரும் 6032 கோடி நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு கூறியுள்ளார்.
Tags:    

Similar News