உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சேலத்தில் திருமண மண்டபத்தில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை

Update: 2022-01-01 10:13 GMT
குடும்ப பிரச்சினை காரணமாக இட்டேரி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
சேலம்:

சேலம் கருங்கல் பட்டியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ராஜீவ். இவர் இட்டேரி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை ராஜீவ் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில்  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார் .தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்

குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News