உள்ளூர் செய்திகள்
சாலையில் தேங்கியுள்ள மழைநீர்

சென்னையில் 2 இடங்களில் அதி கனமழை

Published On 2021-12-31 05:33 GMT   |   Update On 2021-12-31 06:22 GMT
சென்னை நகரில் பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடானது. மாலை நேரத்தில் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடானது. அதன் பிறகு கடந்த ஒரு மாதமாகவே மழை ஓய்ந்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகலில் திடீரென்று மழை பெய்தது. பகல் 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவு வரை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக சென்னை நகரில் பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடானது. மாலை நேரத்தில் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை வரை கடல் பகுதியில் நிலவி வந்தது.

அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்தது. அப்போது திரள் மேக கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் மழை கொட்டியது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மெரினா கடற்கரை, ஆவடி ஆகிய 2 இடங்களிலும் அதி கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சென்னை மெரினா கடற்கரையில் 24 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதற்கு அடுத்த படியாக ஆவடியில் 23 செ.மீ. மழை பெய்தது.

மேலும் சென்னை எம்.ஜி.ஆர். நகர், கலெக்டர் அலுவலகம், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட 6 இடங்களில் தலா 20 செ.மீ. மழை கொட்டியது.

சென்னையில் பெய்த மழை அளவு சென்டி மீட்டரில் வருமாறு:-

செங்குன்றம்

10.3

தாமரைப்பாக்கம்

9.7

கேளம்பாக்கம்

9.4

ஸ்ரீபெரும்புதூர்

8.6

திருவள்ளூர்

5.6

திருப்போரூர்

4.2

ஊத்துக்கோட்டை

3.7

வாலாஜாபாத்

3.7

செங்கல்பட்டு

3.9

காஞ்சிபுரம்

3.4

திருவாலங்காடு

2.9

திருத்தணி

2.5

திருக்கழுக்குன்றம்

2.5

குன்றத்தூர்

1.9

செம்பரம்பாக்கம்

1.9

உத்திரமேரூர்

1.7

செய்யூர்

1.6

ஆர்.கே.பேட்டை

1


காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக 9.2 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 7.4 செ.மீ. மழையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சராசரியாக 4.4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

Tags:    

Similar News