உள்ளூர் செய்திகள்
பாமக சிறப்பு பொதுக்குழு

2026 சட்டசபை தேர்தலில் பாமக தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி - டாக்டர் ராமதாஸ்

Published On 2021-12-29 20:34 GMT   |   Update On 2021-12-29 20:34 GMT
சேப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய இளைஞரணி தலைவர் அன்புமணி, தமிழகத்தை பாமக ஆளவேண்டும் என தெரிவித்தார்.
சென்னை: 

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய டாக்டர் ராமதாஸ், 2026 சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தனி அணி அமைக்க விரும்புகிறோம். இனி கூட்டணி என்றாலே அது பாமக தலைமையில்தான். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என குறிப்பிட்டார்.

இந்தப் பொதுக்குழுவில் டாக்டர் அன்புமணி பேசியதாவது:

நான் முதல்வராக வரவேண்டும் என பதவி வெறி இல்லை. ஆனால், தமிழகத்தை பா.ம.க ஆள வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் அடைவோம்.

2016ல் நாம் ஆள வேண்டுமென கேட்டோம். 2019 மற்றும் 2021ல் அவர்கள் ஆள வேண்டுமென கேட்டோம். 2026ல் நாம் ஆள வேண்டும் என கேட்போம். அடுத்த முறை மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News