உள்ளூர் செய்திகள்
வள்ளலார்நகர் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆய்வு செய்த காட்சி.

டெங்கு தடுப்பு பணி-மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Published On 2021-12-06 09:18 GMT   |   Update On 2021-12-06 09:18 GMT
தெருக்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை தினமும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் வீடுகளை  சுற்றிலும் கொசு மருந்து அடித்தல், தெருக்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Tags:    

Similar News