செய்திகள்
கோப்புபடம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2021-10-12 07:12 GMT   |   Update On 2021-10-12 07:12 GMT
தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத்துறை, தனியார்மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு வருகிற 30 - ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021 - ம் ஆண்டு மாணவர் நேரடி சேர்க்கைக்கான காலக்கெடு வருகிற 30 - ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10 - ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை 

தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத் துறை, தனியார்மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி சேவை மையத்தில் ரூ.50 மட்டும் கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநர், 0421-2230500, 90802-76172, 99447-39810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News