செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-10-06 09:00 GMT   |   Update On 2021-10-06 10:34 GMT
9-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

தமிழக கடலோர பகுதியையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை 7-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

8-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், தர்மபுரி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

9-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 10-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.



சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வருகிற 10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இன்று லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணி 13, வெம்பாக்கம், கேளம்பாக்கம் தலா 11, மேற்கு தாம்பரம், செய்யார் தலா 10, அரக்கோணம், கூடலூர், பரமக்குடி, வேப்பூர் தலா 9, திருபுவனம், சோளிங்கநல்லூர், காட்டுமயிலூர் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News