செய்திகள்
கோப்புபடம்

வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகள் விற்பனை

Published On 2021-09-07 07:13 GMT   |   Update On 2021-09-07 07:13 GMT
வீடுகளில் வைத்து வழிபடும் வகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
உடுமலை:

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு தடைவிதித்துள்ளது.

வீடுகளில் வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் தனி நபர் சென்று கரைக்கலாம், அறநிலையத்துறை கோவில்களில் வைத்தால் உரிய முறையில் அதிகாரிகள் சிலைகளை விசர்ஜனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளது. 

வீடுகளில் வைத்து வழிபடும் வகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:

‘அரை அடி முதல், இரண்டு அடி வரையுள்ள சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வைத்து வழிபட வாங்கிச் செல்கின்றனர். கோவில்களில் வைத்து வழிபட இரண்டரை அடி முதல் 6 அடிவரையிலான காகிதக்கூழ் மற்றும் மாவு கலவையால் செய்யப்பட்ட சிலைகளும் விற்பனைக்கு உள்ளது என்றனர்.
Tags:    

Similar News