செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

3 மாவட்டங்களையும் கண்காணிப்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் உத்தரவு

Published On 2021-05-27 16:41 GMT   |   Update On 2021-05-27 16:41 GMT
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கானோலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருப்பூருக்கு வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி. கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக். ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News