search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM MK Stalin"

    • உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.
    • திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவர் சந்தைக்கு சென்றார்.

    அப்போது, உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.

    தொடர்ந்து, முதலமைச்சருடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு.
    • உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.

    தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.

    மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
    • இதில் தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதிகாரிகளுடன் ஆன்லைனில் ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி வளாகங்களை சீரமைப்புக்காக ரூ. 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீரை முன் கூட்டியே திட்டமிட்டு திறந்த காரணத்தால் தான் இத்தகைய பெருமழையை சமாளித்து உள்ளோம்.
    • இத்தகைய பெருமழை பெய்த நிலையிலும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ளம் பாதித்த வடசென்னை பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் பார்வையிட்டார்.

    மழை நீர் தேங்கிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது நேரு ஸ்டேடியம் வால்டாக்ஸ் சாலை அருகில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.

    பெரியமேடு ரிப்பன் மாளிகை பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. மீனம்பாக்கத்தில் 43 செ.மீட்டரும், பெருங்குடியில் 44 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நாங்கள் ஏற்கனவே எடுத்த நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளது.

    2015-ம் ஆண்டு கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அன்றைக்கு நுங்கம்பாக்கத்தில் 29.4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ. மழை பதிவானது. இப்போது பெருங்குடியில் 46 செ.மீ. மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 43 செ.மீ. மழையும், 36 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது. இது மிக மிக அதிகம்.

    இந்த புயல் விரைந்து கடந்த செல்லாமல் நின்று மெதுவாக நகர்ந்து கடந்ததால் சென்னையில் அதிக மழை பெய்தது. அதனால்தான் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இத்தகைய மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இந்த அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

    2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்தனர். இன்று அதை விட அதிக மழை பெய்திருந்தாலும் கூட 7 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இதுவும் ஏற்பட்டிருக்ககூடாது. அதற்காக வருத்தப்படுகிறேன்.

    தற்போது 9 மாவட்டங்களில் உள்ள 61666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கி உள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.காலையில் பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    மழை நீர் வடிகால் நன்றாக செயல்பட்டாலும் இறுதியில் அந்த தண்ணீர் கடலில் கலக்க அடையார் மற்றும் கூவம் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அவை அதிகம் காணப்பட்டதால், இந்த நதிகளில் வெள்ளம் மெதுவாக வடிந்தது.

    ஆனாலும் அரசு எடுத்து வந்த பணிகளின் காரணமாக வெள்ள பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திட்டமிடாமல் அடையாறில் 1 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணமாக இருந்தது. அது செயற்கை வெள்ளம். இப்போது இது இயற்கையாக ஏற்பட்டது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீரை முன் கூட்டியே திட்டமிட்டு திறந்த காரணத்தால் தான் இத்தகைய பெருமழையை சமாளித்து உள்ளோம். இத்தகைய பெருமழை பெய்த நிலையிலும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

     

    இதனால் சென்னையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், அடையார் ஆற்றில் தடையின்றி சென்று கடலில் கலக்க முடிந்தது. ஆனாலும் சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட மழை பாதிப்பை அவ்வப்போது நான் கேட்டறிந்தேன்.

    பெரும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானாலும், ஒரு ஆட்சியின் உண்மையான கடமை என்பது இந்த இன்னல்களின் தாக்கத்தை குறைப்பதோடு அதில் இருந்து மக்கள் வெளிவர தேவையான முயற்சி மேற்கொள்வதே ஆகும்.

    இந்த மழையிலும் அனைத்து தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களத்தில் இயல்பு நிலை திரும்ப பணியாற்றி வருகின்றனர். அதனால் சென்னையில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.

    ரூ.4 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் பெரிய குற்றச்சாட்டை கூறி வருகிறார். நான் சொல்கிற ஒரே பதில் என்னவென்றால் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதால் நான் சொல்ல விரும்புவது, ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணிகள் நடந்திருந்த காரணத்தால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையை நாம் இப்போது பார்த்திருக்கிறோம்.

    அதில் இருந்து சென்னை தப்பியது என்றால் திட்டமிட்டு செலவு செய்து அந்த பணிகளை நிறைவேற்றிய காரணத்தால்தான் இன்று சென்னை தப்பி உள்ளது. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

    அவர்கள் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டு காலத்தில் இந்த பணிகளை செய்துள்ளோம். வரலாறு காரணாத மழை வெள்ளத்தால் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ரோடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய், உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் இன்று எழுத போகிறோம். இதுகுறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களும் பேச இருக்கிறார்கள். மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர். முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை கொடுத்ததற்கு மக்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் உடன் இருந்தனர்.

    • மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முக ஸ்டாலின் கூறினார்.
    • கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.

    சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளன இன்று, அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.
    • திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

    கோவை:

    கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

    கண்காட்சியின் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிடுகிறார். இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

    திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

    இந்த கண்காட்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை காண அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு, திராவிட இயக்கத்தின் வரலாறு, மு.க.ஸ்டாலின் சந்தித்த போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.

    • சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
    • விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் 2011 உலக கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலயன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டது.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். கலைஞர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள ஸ்டாண்டை அவர் திறந்து வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது அவரது பெயரிலான பெவிலியனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. முதல் போட்டி மும்பையிலும் 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் 3-வது போட்டி சென்னையிலும் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான டோனியும் பங்கேற்கின்றனர்.

    • ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.
    • பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

    சென்னை:

    பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    முதலமைச்சர் 19.12.2022 அன்று நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தைத் தொடங்கி வைத்து. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் இவ்விழாவிலேயே ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    இந்தக் கோரிக்கையை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கு. சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி. சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 202 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, புதிய கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

    திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோவை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசினர் கலை கல்லூரிகள் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • முதலமைச்சர் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்.
    • சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×