செய்திகள்
கமல்ஹாசன்

தேர்தல் தோல்வி எதிரொலி- வேட்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை

Published On 2021-05-04 09:02 GMT   |   Update On 2021-05-04 09:02 GMT
தேர்தல் தோல்வியால் துவண்டு விட வேண்டாம் என்றும் தொடர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்றும் கட்சியினரை கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் குறைந்த ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலருடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள் சிலரும் உடன் இருந்தனர்.

தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி அப்போது அவர்களிடம் கமல்ஹாசன் பல்வேறு வி‌ஷயங்களை கேட்டறிந்தார். தேர்தல் தோல்வியால் துவண்டு விட வேண்டாம் என்றும் தொடர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கட்சியினரை கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தொடர்ந்து மக்கள் பணியை ஆற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். இன்று சில வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். அனைவரையும் மொத்தமாக சந்திக்க முடியாது என்பதால் நாளை மேலும் சிலருடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

கமல்ஹாசனின் அறிவுரையை ஏற்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தொடர்ந்து கட்சி பணியாற்றுவார்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளையும் தொடர்ந்து செய்வார்கள்” என்றார்.
Tags:    

Similar News