செய்திகள்
அபராதம் (கோப்பு படம்)

பாபநாசம் பகுதியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ் டிரைவருக்கு அபராதம்

Published On 2021-04-25 10:14 GMT   |   Update On 2021-04-25 10:14 GMT
பாபநாசம் பகுதியில் தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக பயணிகளை ஏற்றி சென்ற பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாபநாசம்:

பாபநாசம் தாலுகா ராஜகிரி மற்றும் பண்டாரவாடை வருவாய் கிராமங்களில் வருவாய்த்துறை, காவல்துறை சார்பில் பொதுஇடங்களில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா 200 வீதம் ரூ.1000 அபராதம் விதித்து புது முக கவசம் வழங்கப்பட்டது.

மேலும் பண்டாரவாடை பிரதான சாலையில் சென்ற தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.

உடனடியாக பாபநாசம் சரக வருவாய் ஆய்வாளர் சரவணன் பேருந்தை நிறுத்தி நடத்துனரிடம் அரசு வழிகாட்டு நெறிமுறைபடி அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மிகாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதமும் விதிக்கப்பட்டது.

இப்பணியின் போது தலைமை காவலர் ஞானசேகர், கிராம நிர்வாக அலுவலர் பழனிகுமார், கிராம உதவியாளர்கள் கார்த்திக், முகமது பாட்சா, புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News