செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2021-04-20 12:58 GMT   |   Update On 2021-04-20 12:58 GMT
தமிழக மக்களுக்கு தடையின்றி கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 

பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை. அங்கு 240 டன் ஆக்ஸிஜன் கையாளப்படுகிறது.

முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. கொரோனா தடுப்பூசி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பு மருந்து வீணாகாமல் தடுப்பூசியை கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

மேலும் 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. புனேவிலிருந்து வந்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News