செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகளை பதிவு செய்த போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர்

போலீசார், ஊர்க்காவல் படையினர் 180 பேர் தபால் வாக்கு பதிவு செய்தனர்

Published On 2021-04-02 08:49 GMT   |   Update On 2021-04-02 10:37 GMT
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் போலீசார் 180 பேர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தபால் வாக்கு சீட்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தபால் வாக்குகளை பெட்டியில் போடுவதற்கும் பிரத்யேக வசதி செய்யப்பட்டு இருந்தது.

திருப்பூர் மாநகர பகுதியில் பணியாற்றும் போலீசார் வாக்களிக்க வசதி செய்யப்பட்டது. இதை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவி ஆணையாளர் வாசுகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று காலை முதல் மாலை வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இதில் திருப்பூர் வடக்கு தொகுதியில் 67, திருப்பூர் தெற்கு தொகுதியில் 72, பல்லடம் தொகுதியில் 27, அவினாசி தொகுதியில் 13, உடுமலை தொகுதியில் 1 என மொத்தம் 180 தபால் வாக்குகள் பதிவானது.

தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை.

மற்றவர்கள் தபால் வாக்குச்சீட்டுகளை வாங்கி சென்றனர். தபால் வாக்குகள் அனைத்தும் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News