செய்திகள்
கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.4.63 கோடி மோசடி- 2 பேர் கைது

Published On 2021-03-04 03:13 GMT   |   Update On 2021-03-04 03:13 GMT
சென்னை அண்ணாசாலையில் உள்ள பெடரல் வங்கி கிளையில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.4.63 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெடரல் வங்கி கிளையில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.4.63 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சுவஸ்திக் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பெடரல் வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடியில் ஈடுபட்டதாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சுவஸ்திக் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் (வயது 51) மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய ரவிச்சந்திரன் (41) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News