செய்திகள்
தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளதை படத்தில் காணலாம்.

சுட்டெரிக்கும் வெயில்- திருப்பூரில் சூடுப்பிடித்த தர்ப்பூசணி பழங்கள் விற்பனை

Published On 2021-02-25 09:55 GMT   |   Update On 2021-02-25 12:20 GMT
திருப்பூர் மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் உடல்சூட்டை தணிக்க தர்ப்பூசணி பழங்கள் மற்றும் பழச்சாறுகளை வாங்கி அருந்துகின்றனர்.
திருப்பூர்:

பனிக்காலம் முடிவைடந்து இன்னும் ஒரு சில மாதங்களில் கோடை காலம் தொடங்க உள்ளது. அதில் கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரத்தின் தாக்குதலை சமாளிப்பதற்கு பொதுமக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது.

வெப்பத்தின் தாக்குதலால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கு தர்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை உள்ளிட்ட பழவகைகள் உதவி புரிகிறது. இதில் 90 சதவீத நீர் இருப்பை கொண்டுள்ள தர்பூசணி பழமே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதில் தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், இரும்புசத்து உள்ளது. இதனால் இதயம் முதல் சிறுநீரகம் வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலையில் சற்று பனியின் தாக்கம் இருந்தாலும் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள் உடல்சூட்டை தணிக்க தர்ப்பூசணி பழங்கள் மற்றும் பழச்சாறுகளை வாங்கி அருந்துகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் தர்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.

உடுமலை சுற்றுப்புறப் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் நிலப்போர்வை மற்றும் திறந்தவெளியில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதை கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் தீவிரமாக பராமரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News