செய்திகள்
எல் முருகன்

நாராயணசாமியால் தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது- எல் முருகன்

Published On 2021-02-22 14:31 GMT   |   Update On 2021-02-22 14:31 GMT
நாராயணசாமியால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரையில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

முதல்வர் நாராயணசாமியால் தான் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது. காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, தென் மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றி தான் என தெரிவித்தார். 

காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை, ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளது. புதுச்சேரியில் எம்எல்ஏவை தக்க வைக்க கூட திமுகவினால் முடியவில்லை என விமர்சித்துள்ளார். 

முன்னதாக இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News