செய்திகள்
நிரம்பி வழியும் தடுப்பணைகள்

ஆரணி ஆற்றின் குறுக்கே நிரம்பி வழியும் தடுப்பணைகள்

Published On 2020-11-28 07:02 GMT   |   Update On 2020-11-28 07:02 GMT
ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுருட்டப்பள்ளி, சிட்றபாக்கம் தடுப்பணைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஒதப்பை பகுதியில் உள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.
ஊத்துக்கோட்டை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆறு அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று காலை நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுருட்டப்பள்ளி, சிட்றபாக்கம் தடுப்பணைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஒதப்பை பகுதியில் உள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளதால் ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஓரமாக உள்ள 150 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News