search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reservoir"

    • கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை.
    • இதன் காரணமாக சீராக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரா ட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சீராக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாடு

    இதற்கிடையே தூத்துக்குடி மாநகராட்சிக்கு தாமிர பரணி ஆற்றில் கலியா வூர் நீரேற்று நிலை யத்தில் இருந்து கிடைக்க கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. எனவே பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இந்நிலையில் கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு அதிகாரி களுடன் கருத்து க்களை கேட்டறிந்தார்.

    இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க ப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. சீரான குடிதண்ணீர் வழ ங்கப்படும் பொதுமக்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு க்கொள்கிறேன் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி உதவிபொ றியாளர் சரவணன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கருணா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.
    • நீர் பாய்ச்சுவதற்கும், உபரி நீரை வெளியேற்றுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகிலுள்ள விழிதியூர் என்ற கிராமத்திலிருந்து இரும்புத்தலை என்ற கிராமத்தின் வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவளிவநல்லூர், குமாரமங்கலம், அரித்துவாரமங்கலம், கேத்தனூர், பெருங்குடி ஆகிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும் பல ஏக்கர் வயல்களுக்கு விவசாயம் செய்வதற்கு பயனுள்ளதாக விளங்கக்கூடிய வாய்க்காலின் நீரை ஒழுங்குபடுத்தும் நீர்த்தேக்கமானது திருவாரூர் மாவட்டம் பெருங்குடியில் அமைந்துள்ளது.

    அந்த நீர்த்தேக்கமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.

    மேலும் நீர் பாய்ச்சுவதற்கும் உபரி நீரை வெளியேற்றுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் தங்களின் சொந்த செலவில் சரி செய்து உள்ளனர். ஆனால் அது தற்காலிகமானது. அதுமட்டுமல்லாது வாய்க்காலை சரிவர தூர்வார வில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனேவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீர் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பால் இரு தரப்பினருக்கும் மோதல்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவருக்கும் லட்சுமாயூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (45) என்பவருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டபோது அந்த இடம் குணசேகரனுக்கு சொந்தமான இடம் என்பதால் அவர் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக சூர்யா தரப்பினருக்கும் குணசேகரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் இரு தரப்பயும் சேர்ந்த காளியப்பன்,  அப்புக்குட்டி, சேகர், செல்வம், மாதையன்,   சூர்யா, தாயம்மாள், சத்யா,  நஞ்சப்பன்,  சேட்டு, குருசாமி ஆகிய 11 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #Reservoir #PalarRiver
    வேலூர்:

    கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.

    பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Reservoir #PalarRiver




    பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். #AnbumaniRamadoss
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே பாலாறு விழிப்புணர்வு கூட்டம் பா.ம.க. சார்பில் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுபேசியதாவது:-

    பாலாறு பகுதிகளில் மணல் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்ட வேண்டும்.

    ஆந்திரா, கர்நாடகம் போன்ற பக்கத்து மாநிலங்களில் 12 அடியாக இருந்த தடுப்பணைகளை 17 அடியாக உயர்த்தி உள்ளது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட விதிகளை மீறி கர்நாடகம் 14 ஏரிகளில் 17 தடுப்பணைகளை கட்டி உள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் தடுத்து நிறுத்தப்படுகிறது. நாம் மழைநீரை சேமிக்காமல் கடலில் விட்டு விடுகிறோம்.

    மழை நீரினால் மாவட்டத்தில் உள்ள 317 ஏரிகள் நிரம்பி வந்தது. தற்போது 124 ஏரிகள் அரைகுறையாக மழைநீர் முழு கொள்ளவை எட்டாமல் உள்ளது.

    பாலாற்றில் நீர் ஆதாரம் குறைந்துவிட்ட நிலையில் கிடைக்கின்ற நீரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.மேலும் மாற்று நீர் ஆதாரங்களையும் தேடுவது ஒன்றே தீர்வாகும்.

    தென்பெண்ணை, செய்யாறு, பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி மழைநீரை சேமித்து வைக்க வேண்டும்.

    காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பாலாறு விளங்குகிறது. பாலாற்றில் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நாம் அனைவரும் கை கோர்ப்போம். பாலாற்றை காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலக பாமா, கிழக்கு மாவட்ட செயலாளர் ராம்குமார், என்.எஸ்.ஏகாம்பரம், இலந்தோப்புவாசு வக்கீல் சக்கரபாணி உள்பட கலந்து கொண்டனர்.

    முன்னதாக காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பழைய பாலாற்றை மீட்டுக் கொண்டுவர வேண்டும். பாலாற்று பிரசாரம் போல், தாமிரபரணி, காவிரி, வைகை, அத்திக்கடவு அவினாசி, அட்டப்பாடி திட்டம், கொள்ளிடம் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மைத் திட்டம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அடுத்த 4 ஆண்டு காலத்தில் 20 நீர்த் திட்டங்களை செயல்படுத்த, சுமார் ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். அதன்மூலம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்து, தாமிரபரணி, அத்திக்கடவு அவினாசி, 58 கால்வாய்த் திட்டம், தோனிமடு திட்டம், நல்லாறு, பாண்டியாறு, தென்பெண்ணை, பாலாறு இணைப்புத் திட்டம், காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் உமாபதி, மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன், மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் நேற்று இரவு காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் பாலாற்றை பாதுகாப்பது தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். #AnbumaniRamadoss

    டெல்டா மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    கர்நாடகாவில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை கால்வாய்க்கு வந்து அங்கிருந்து மற்ற ஆறுகளுக்கு பிரித்து விடப்படுகிறது.

    ஆறுகளுக்கு திருப்பி அனுப்பியது போக உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் பெரும்பாலும் தடுப்பணைகள் இல்லாமல் கடலில் தான் போய் கலக்கிறது.

    முன்பு தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. இதனால் தண்ணீர் அதிகளவு சேமிப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்கள் வறட்சியில் சிக்கின. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தற்போது வரும் தண்ணீரை கடலுக்கு அனுப்பாமல் தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணைகளை கட்டி அதற்கான கட்டமைப்புளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும், கீழணைக்கும் இடையில் கோவிலடி சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர்புத்தூர், கூகூர், குடிதாங்கி, திருவைகாவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் கொள்ளிடத்தின் இரு கரைகளுக்கும் அருகில் உள்ள சுமார் 2.40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நிரந்தரமாக பாசன வசதி கிடைக்கும்.

    மேலும் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரையில் உள்ள கீழணையின் அருகே ஆதனூர், குமாரமங்கலம் பகுதியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு அதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    அணைக்கரையில் கீழணை வடக்கு பிரிவில் 30 கண்மாய்களும், தெற்கு பிரிவில் 40 கண்மாய்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் வழியாக வடக்கு ராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் தடுப்பணைகள் இல்லாததாலும், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் பாசன தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் கடலுக்கு சென்று விடுகிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×