செய்திகள்
ராமதாஸ்

மழை நீரை வெளியேற்றும் பணிகளில் பா.ம.க.வினர் ஈடுபட வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2020-11-27 09:24 GMT   |   Update On 2020-11-27 09:24 GMT
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியிலும், மழை நீரை வெளியேற்றும் பணிகளிலும் பா.ம.க.வினர் ஈடுபட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்கவும், அனைத்துப் பகுதிகளிலும் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் வேளச்சேரி, புறநகரில் தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்ட நிலையில், அங்கு வெள்ள நீர் வடிகால்களை புதிதாக அமைத்து நீர் தேங்குவதை தடுக்க முடியுமா? என்பது குறித்து வல்லுனர் குழுவை அமைத்து தமிழக அரசு ஆராய வேண்டும்.

புதுச்சேரிலிலும் நிவர் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புயல் சேதங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்கவும், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியிலும், மழை நீரை வெளியேற்றும் பணிகளிலும் பா.ம.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News