செய்திகள்
தக்காளி

அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

Published On 2020-10-31 13:25 GMT   |   Update On 2020-10-31 13:25 GMT
வடமதுரை அருகே உள்ள அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளி பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றது. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 டன் வரை தக்காளி விற்பனை நடைபெறும். வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தக்காளி விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது. தற்போது அய்யலூர் சந்தையில் உள்ளூர் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த வாரங்களில் 15 கிலோ எடை கொண்ட பெட்டி ஒன்று ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்து 15 கிலோ எடை கொண்ட பெட்டி ஒன்று ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News