செய்திகள்
நாமக்கல் முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு

Published On 2020-10-24 14:07 GMT   |   Update On 2020-10-24 14:07 GMT
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதன் காரணமாக முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக சரிவடைந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-535, ஐதராபாத்-500, விஜயவாடா-529, மைசூரு-527, மும்பை-545, பெங்களூரு-525, கொல்கத்தா-573, டெல்லி-550.

இதனிடையே கறிக்கோழி கிலோ ரூ.107-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.135-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News