செய்திகள்
மழை

அருப்புக்கோட்டையில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2020-09-26 08:36 GMT   |   Update On 2020-09-26 08:36 GMT
அருப்புக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது.

இதையடுத்து நேற்று மதியம் 3 மணிக்கு அருப்புக்கோட்டையில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை பலத்த மழையாக நீடித்தது. பாளையம்பட்டி, காந்திநகர், பந்தல்குடி, கோபாலபுரம், கட்டங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மணி வரை பலத்த மழை பெய்தது. 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு மழை தொடர்ந்து பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதுடன், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

வத்திராயிருப்பில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

வத்திராயிருப்பை சுற்றியுள்ள மகாராஜபுரம், சேது நாராயணபுரம், கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம் உள்ளிட்ட கிராம பகுதியிலும் மழை பெய்தது.
Tags:    

Similar News