தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.@iVijayakant அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 24, 2020