செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி முன்னேற்ற அறிக்கை- எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

Published On 2020-08-25 03:06 GMT   |   Update On 2020-08-25 03:06 GMT
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை:

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019-2020-ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம் - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகள் குறித்து 31-7-2020 வரையிலான பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் இதுவரையிலான முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்கள் உள்ளடக்கிய நூல் வடிவத்தில் தொல்லியல் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” என்ற அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

மேலும் மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News