search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழடி அகழாய்வு"

    • கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்
    • மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரபாகர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.

    முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

    கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
    • இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

    முதற்கட்டமாக நடந்த அகழாய்வில் தமிழகத்தின் நாகரிகத்தை அறியும் வகையில் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்தது. 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.

    இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக வைகை கீழடி நாகரிகம் விளங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கீழடி மற்றும் அருகில் உள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கீழடியில் 12 குழிகளும், கொந்தகையில் 2 குழிகளும் தோண்டப்பட்டு தொல்லியல் பணிகள் நடந்தது. அண்மையில் கீழடி அகழாய்வு குறித்து ஆவணம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றுடன் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மாலை பணிகள் முடிந்த பின் தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்புடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
    • தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்து இருக்கின்றன.

    இதில் மத்திய தொல்லியல் துறை தரப்பில் 3 முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 முறையும் அகழாய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த 8 கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான தொல் பொருட்களை மக்கள் பார்க்கும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூ.18 கோடியே 46 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் தொடர்ச்சியாக கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் தொல்லியல் துறை இணை இயக்குனரும், கீழடி இயக்குனருமான ஆர்.சிவானந்தம், தொல்லியல் அலுவலர் காவியா ஆகியோர் தலைமையில் கொந்தகையில் நடைபெற்று வரும் 4-வது கட்ட அகழாய்வில், 'இசட்.கியூ.3' என்ற அகழாய்வு குழியில் 46 செ.மீ. ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது. இது கருப்பு, சிவப்பு நிற வகையை சார்ந்தது.

    அந்த தாழியின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்திலும் இருக்கிறது. அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.

    வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண்ணாடி மணிகள், பாசி மணிகள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட்கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது கண்டெடுக்கப்பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
    • இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதில் 9-வது குழியில் சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது பானை ஓடுகள் வெளிவந்தன.

    அவற்றை வகைப்படுத்தியபோது, சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. பாம்பின் கண்கள், வாய் போன்ற அமைப்பும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.

    இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. இது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ. பருமனும் கொண்டுள்ளது.

    இதுதவிர சுடுமண்ணால் செய்த பந்து, வட்டச்சில்லுகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இந்த தகவலை மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.

    • மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.
    • கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தாய்த் தமிழ்நாட்டின் மீது பற்றும் திராவிடமாடல் நல்லாட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு எனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னு டைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    "உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள்" மாநாட்டினை நீங்கள் நடத்தியபோது அதிலும் காணொலி மூலமாக கலந்து கொண்டு நான் உரையாற்றினேன்.

    பெட்னா அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் எம்.எஸ்.எம்.இ. துறையின் கீழ் இயங்கக்கூடிய டான்சிம் நிறுவனம் அந்த மாநாட்டை நடத்தியது. உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் தமிழ்நாட்டில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

    இந்த முன்னெடுப்பின் முதல் கட்டமாக "அமெரிக்கத் தமிழ் நிதியம்"என்ற அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற அது ஊக்கமளிப்பதாக அமைந்தது.

    தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர்வைத்துக் கொண்டவர்கள் 18 வயதுக்குமேல், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி பால கிருஷ்ணன் கணக்கிட்டுச் சொல்லி இருக்கிறார். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும். மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

    கழக ஆட்சி அமைந்ததும், பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் பொது ஊழிக்கு முன் 6-ம் நூற்றாண்டிலேயே நகர மயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதும், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதையும் கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது.

    அதேபோல், சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிநீங்கிய நெல்மணிகளின் காலம் பொது ஊழிக்கு முன் 1155 என கண்டறியப்பட்டுள்ளது. 'தண்பொருநை' என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களான கொந்தகை, அகரம், மணலூர், தூத்துக்குடி மாவட்டம்-சிவகளை, அரி யலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்-மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம்-வெம்பக் கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்-துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் விரிவான ஆய்வுகள் நடந்து வருகிறது.

    கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பொருளானது பொது ஊழிக்கு முன் 1615-ம் ஆண்டுக்கும், பொது ஊழிக்குமுன் 2172-ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறை தான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப் போகிறது.

    சிந்துவெளியில் 'காளைகள்'தான் இருந்தன. இது திராவிடச் சின்னம்! சிந்து வெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசு, தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது.

    இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும். இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித் தான். தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்களும், பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 'கீழடி அருங்காட்சியகம்' தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்து, திருநெல்வேலியில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காண்பதற்கு நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று இரு கரம் கூப்பி அழைக்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • கிணறு பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது போன்று காணப்பட்டது.
    • மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து கொடுங்கலூர் வந்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொடுங்கலூர், பூவத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் வீட்டின் அருகே குப்பைகளை புதைக்க குழி தோண்டினார். அப்போது தரையில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது, வட்டவடிவில் பழமையான கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த கிணறு பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது போன்று காணப்பட்டது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த பார்த்தசாரதி, இதுபற்றி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றை ஆய்வு செய்தனர். இதில் கிணற்றின் மேல்பகுதியில் காணப்பட்ட மண்ணை ஆய்வு செய்தபோது அது சுடுமணலால் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் இந்த கிணறு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்கலாம் என தெரிகிறது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இங்கு கண்டு பிடிக்கப்பட்ட பழமையான கிணறு, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களுடன் தொடர்பு இருப்பதுபோல உள்ளது. எனவே இதுதொடர்பாக கீழடியில் கிடைத்த பொருள்களுடன் இணைத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் ராகவ வாரியார் கூறும்போது, பார்த்தசாரதியின் வீட்டில் பழமையான கிணறு கண்டு பிடிக்கப்பட்ட பகுதிக்கும் தமிழர் கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பகுதியில் மக்கள் வசித்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கலாம். இங்குள்ள கோவில்கள், நீராதாரங்கள் ஆகியவை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.

    மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து கொடுங்கலூர் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பகுதிக்கும், மதுரை பகுதிக்கும் தொடர்பு இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகிறார்கள்.

    • கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
    • அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பண்டைய கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.

    வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு உள்ளது. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணிகளும், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் 5 கட்டமாக அகழாய்வு பணிகளும் நடந்துள்ளது. இந்த அகழாய்வுகளின்போது சூது பவளம், உறை கிணறுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு, ஒரு இஞ்ச் பானை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்க்கும் விதமாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நேரில் வந்து திறந்து வைத்தார். அருங்காட்சியகம் அவரே வியக்கும் வகையில் இருந்தது.

    இதனை தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தை தினமும் ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    அகழாய்வு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும்.

    ஆனால் கீழடி அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணியில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அஜய், காவ்யா உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.

    இதனால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது அருங்காட்சியகம் திறக்கப்பட்டு விட்டதால் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கீழடியில் 9-ம் கட்டமாக அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

    கீழடியில் நடந்த அகழாய்வு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது.

    தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா உள்ளிட்டோர் தலைமையிலான பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
    • 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளின் கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    புதுடெல்லி:

    வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

    இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

    இந்நிலையில் 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளின் கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஆய்வு நடத்தினர். அதில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள்படி கீழடி ஆய்வு அறிக்கையை தயார் செய்தனர்.

    இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமையகத்தில் தலைமை இயக்குனரிடம் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.

    ×