என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருக்குறளையே மாற்றுகிறார்கள்... கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து சு.வெங்கடேசன் பதிவு
- கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம்
- திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.ஒய். சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம். அந்த குற்றத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்" என்று அமர்நாத் இராமகிருஷ்ணன் சொல்கிறார். நாங்கள் திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!" என்று பதிவிட்டுள்ளார்.






