கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு அனுமதி தராதது ஏன்? - மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது.எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான்.
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு அனுமதி தராதது ஏன்? - மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
Published on

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்?

பருவமழை தொடங்கினால் நிதி வீணாகும், ஆராய்ச்சி முடங்கும் எனத் தெரிந்தும் மௌனம் காப்பது ஏன்?

தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் கைவிடப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில் இருந்து தான் தொன்மை நோக்கிய எங்களின் பயணம் பாய்ச்சல் வேகங்கொண்டது.

எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான்.

இப்பொழுது மீண்டும் தடுக்கிறீர்கள்.

உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com