செய்திகள்
வனப்பகுதியில் மயங்கி கிடந்த காட்டுயானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சி.

கோவை அருகே வனப்பகுதியில் மயங்கி கிடந்த காட்டுயானை

Published On 2020-08-09 13:10 GMT   |   Update On 2020-08-09 13:10 GMT
கோவை அருகே வனப்பகுதியில் காட்டுயானை ஒன்று மயங்கி கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அதற்கு சிகிச்சை அளித்தனர்.
பேரூர்:

கோவை வன கோட்டத்துக்கு உட்பட்ட போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளபதி பிரிவில் நேற்று மாலை காட்டுயானை ஒன்று மயங்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். 

அப்போது மயங்கி கிடப்பது 12 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை என்பது தெரியவந்தது. பின்னர் மயங்கி கிடந்த காட்டுயானைக்கு 15 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன்பிறகு காட்டுயானை கண் விழித்தது. ஆனால் எழுந்து நடக்க முடியவில்லை. தொடர்ந்து வனத்துறையினரும், வன கால்நடை குழுவினரும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
Tags:    

Similar News