செய்திகள்
ரெயில் சேவை

தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு

Published On 2020-07-14 12:32 GMT   |   Update On 2020-07-14 12:32 GMT
தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,126 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என்று  தமிழக அரசு தெற்கு ரெயில்வேயிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை  15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் ஜூலை 31ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சி- மயிலாடுதுறை, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோயில் ஆகிய நகரங்களுக்கான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாகவும்  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News